‘விஸ்வரூபம் 2’ கோச்சடையானுக்கு முன்பா பின்பா?

‘விஸ்வரூபம் 2’ கோச்சடையானுக்கு முன்பா பின்பா?

செய்திகள் 21-Feb-2014 10:51 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் ஆக அமைந்த படம் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் முடிந்துள்ள நிலையில் இப்படம் எப்போது ரிலீசாகும் என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது! இப்படத்தின் ரிலீஸ் குறித்து பல்வேறு தேதிகள் குறிப்பிட்டு பேசப்பட்டு வந்த நிலையில், ‘விஸ்வரூபம் 2’ படத்தை வருகிற மே 9-ஆம் தேதி, ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது! மார்ச், ஏப்ரல் மாதங்கள் பரீட்சை காலம் என்பதாலும், ஏப்ரல் மாதம் ரஜினிகாந்தின் ‘கோச்சடையான்’ படம் உட்பட பல பெரிய படங்கள் வெளியாக இருப்பதாலும் அந்த படங்களுடன் ‘விஸ்வரூபம் 2’ படத்தை வெளியிட விரும்பவில்லை கமல்ஹாசன் என்று கூறப்படுகிறது! அதனால் கோடை விடுமுறை ஸ்பெஷலாக ’விஸ்வரூபம் 2’ படத்தை மே 9 –ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;