ஷங்கரின் அறிமுகங்களுக்கு அடுத்த பரீட்சை!

ஷங்கரின் அறிமுகங்களுக்கு அடுத்த பரீட்சை!

செய்திகள் 21-Feb-2014 10:04 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நகுல் தமிழ்சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானபோது ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். ஆனால், கடைசியாக வெளிவந்த அவரின் படங்களான ‘மாசிலாமணி’, ‘கந்தகோட்டை’, ‘நான் ராஜாவாகப் போகிறேன்’ ஆகியவை சரியாக கைகொடுக்கவில்லை. இந்நிலையில் ‘ஈரம்’ இயக்குனர் அறிவழகனின் இயக்கத்தில் நகுல் நடித்திருக்கும் ‘வல்லினம்’ படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. நீண்டநாட்களாக ரிலீஸ் தள்ளிக்கொண்டே போன இப்படம் ரிலீஸுக்குத் தயாராகிவிட்டதால் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் இயக்குனர் ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட நகுலும், இயக்குனர் அறிவழகனும்.

‘பேஸ்கட் பால்’ விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் நகுலின் ‘வல்லினம்’ படம் ரிலீஸாகும் அதே தேதியில்தான், சி.வி.குமாரின் தயாரிப்பில் துப்பறியும் கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் ‘தெகிடி’ படமும் வெளியாகிறது. வித்தியாசமான கதைகளுடன் களமிறங்கும் இந்த இரண்டு படங்களுக்குமே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பிருப்பதால் பிப்ரவரி 28 சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குற்றம் 23 - டிரைலர்


;