பாலா நாயகிக்கு இன்று ஸ்பெஷல் டே!

பாலா நாயகிக்கு இன்று ஸ்பெஷல் டே!

செய்திகள் 21-Feb-2014 10:02 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர் அர்ஜுனால் ’மதராசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வேதிகா! இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘முனி’, ‘காளை’, ‘பரதேசி’ என பல படங்களில் குறிப்பிடும்படியான கேரக்டர்களில் நடித்து, ரசிகர்களின் கனவு தேவதையாக திகழ்ந்து வரும் வேதிகா, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது நடிப்புத் திறனை அடையாளம் காட்ட வேண்டுமென்றால் அதற்கு பாலா இயக்கிய ‘பரதேசி’ என்ற ஒரு படம் போதும்! தற்போது வசந்தபாலன் இயக்கி வரும் ‘காவியத்தலைவன்’ படத்தில் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடித்து வரும் வேதிகா பிறந்த நாள் இன்று! ‘பியூட்டிஃபுல் கேர்ள்’ வேதிகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமிதம் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நகர்வலம் - டீசர்


;