‘கோச்சடையானை’ முந்தும் ‘மான் காரத்தே’!

‘கோச்சடையானை’ முந்தும் ‘மான் காரத்தே’!

செய்திகள் 21-Feb-2014 9:32 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் செஞ்சுரி அடித்து சூப்பர்ஹிட் ஆனதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடுத்து வரவிக்கும் படம் ‘மான் கராத்தே’. இப்படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன், ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை இயக்கி வருபவர் கே.திருக்குமரன். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் உலக காதலர் தினத்தன்று வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அனிருத்தின் யூத்ஃபுல் இசையில் வரும் மார்ச் 1ஆம் தேதி இப்படத்தின் இசைவெளியீடு நடைபெறவிருக்கிறது.

முதலில் இப்படத்தை இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிடவே திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், ரஜினியின் ‘கோச்சடையான்’, வடிவேலுவின் நடிப்பில் நீண்டநாட்கள் கழித்து வெளிவரும் ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’ ஆகிய படங்கள் ஏப்ரல் வெளியீடாக வரும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து தற்போது தங்கள் வெளியீட்டு திட்டத்தை மாற்றி அமைத்திருக்கிறார்கள் ‘மான் கராத்தே’வின் தயாரிப்பாளர்கள். ‘கோச்சடையான்’ படத்திற்கு முன்பாகவே தங்களின் படத்தை வெளியிட்டுவிடலாம் என நினைத்த அவர்கள், வரும் மார்ச் 28ஆம் தேதி இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறர்கள். ரிலீஸில் முந்தும் இப்படம் வசூலில் எப்படி என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;