விஜய் - முருகதாஸின் ‘துப்பாக்கி’ சென்டிமென்ட்!

விஜய் - முருகதாஸின் ‘துப்பாக்கி’ சென்டிமென்ட்!

செய்திகள் 20-Feb-2014 5:30 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘துப்பாக்கி’யை தொடர்ந்து விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் துவங்கி, சமீபத்தில் சென்னை ஏர்போர்ட்டிலும் நடந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பை ஹைதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடத்த இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்! இந்தப் படப்பிடிப்பில் விஜய்யுடன் சமந்தாவும் கலந்துகொள்ள இருக்கிறார்.

ஏற்கெனவே விஜய் நடித்த, ‘ஜில்லா’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்திருப்பதாலும், இப்படம் நல்ல வெற்றியை பெற்றதாலும் அந்த சென்டிமென்ட் தொடர்கிறது என்கிறார்கள்! இது தவிர, ‘ஜில்லா’வுக்கு போட்டியாக வந்த அஜித்தின் ‘வீரம்’ படத்தின் படப்பிடிப்பும் இதே ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடக்க, அப்படமும் நல்ல வெற்றியை பெற்றுள்ளதால் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி ராசியான இடமாகி விட்டதுபோலும்!

இந்தப் படத்தை வரும் தீபாவளி வெளியீடாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை செப்டமபர் அல்லது அக்டோபர் மாதம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;