கோலிவுட்டுக்கு அஜித், பாலிவுட்டுக்கு ரித்திக்!

கோலிவுட்டுக்கு அஜித், பாலிவுட்டுக்கு ரித்திக்!

செய்திகள் 20-Feb-2014 3:57 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ரித்திக் ரோஷன் நடிக்கும் ஹிந்தி படம் ‘பாங் பாங்’. கடந்த ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடக்கும்போதுதான் ரித்திக் ரோஷனுக்கு தலையில் அடிப்பட்டதும், அதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை எல்லாம் எடுத்துக் கொண்டதும்! இப்போது ‘பாங் பாங்’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. இதில் கலந்துகொண்டு நடிக்கும் ரித்திக்கிடம், சண்டை காட்சிகளில் டூப்பை பயன்படுத்தலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்! ஆனால் ரித்திக் அதையெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லையாம்! மற்ற காட்சிகளில் நடிப்பது மாதிரி சண்டை காட்சிகளிலும் தானே நடிக்கிறேன் என்று கூறி அவரே நடிக்கிறாராம்!

பொதுவாக ரித்திக் நடிக்கும் படங்களில் அவர் சம்பந்தபட்ட ரிஸ்கான சண்டை காட்சிகளில் கூட அவரே நடிப்பார்! ரிஸ்க் பற்றி அவர் கவலைப்படுவதில்லை. அதனால் டூப் பயன்படுத்துவதை அவர் விரும்ப மாட்டார். அதுபோல தான் இந்தப் படத்திலும். கோலிவுட்டில் நம் அஜித் மாதிரி, பாலிவுட்டில் ரித்திக் ரோஷன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காஸி - மேக்கிங் வீடியோ


;