கௌதம் மேனன் படத்தில் பிருத்திவிராஜ்!

கௌதம் மேனன் படத்தில் பிருத்திவிராஜ்!

செய்திகள் 20-Feb-2014 12:30 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சிம்பு மற்றும் அஜித் நடிக்கும் படங்களின் வேலைகளில் பிசியாக இருக்கும் கௌதம் மேனன், தனது சொந்தத் தயாரிப்பிலும் பிசியாக இருக்கிறார்! கௌதம் மேனன் தயாரிக்கும் படத்தை ‘மொழி’, ‘அபியும் நானும்’ போன்ற பல படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்குகிறார். இந்தப் படத்தில் ஏற்கெனவெ ராதா மோகன் இயக்கத்தில் நடித்திருக்கும் பிருத்திவிராஜ் ஹீரோவாக நடிக்க, கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். மோகன்லாலுடன் ‘கீதாஞ்சலி’ என்ற மலையாள படத்தில் நடித்தவர் கீர்த்தி சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளது. ஆனால் இது தமிழ் படம் இல்லை: மலையாள படம்! ராதா மோகன் இயக்கும் முதல் மலையாள படம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துருவ நட்சத்திரம் - டீசர்


;