மீண்டும் ஒரு ‘முள்ளும் மலரும்’

மீண்டும் ஒரு ‘முள்ளும் மலரும்’

செய்திகள் 20-Feb-2014 10:51 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’ ‘மெட்டி’ என நம் மனதிலிருந்து நீங்காத பல தரமான படங்களை தந்தவர் இயக்குனர் மகேந்திரன்! இவர் இயக்கிய கடைசி படம், ‘சாசனம்’. பெரிய ஒரு இடைவெளிக்குப் பிறகு மகேந்திரன் மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். 1980-களில் ஏராளமான ஹிட் பாடல்களை தந்த கூட்டணி மகேந்திரன் - இளையராஜா! தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் இணைவது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பாடல் கம்போசிங் வேலைகளை இந்த மாத கடைசியில் துவங்கவிருக்கிறார்கள். புதிய ஒரு கதைக்களத்துடன் புது முகங்களை வைத்து இயக்கவிருக்கும் இந்தப் படத்திற்கு புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.லோகநாதனின் மகன் பி.சஞ்சய் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங் பொறுப்பை காசி விஸ்வநாதன் ஏற்றிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் (மார்ச்) முதல் வார்த்தில் துவங்கி, மே மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் இயக்குனர் மகேந்திரன்! மகேந்திரனின் இயக்கத்தில் மற்றுமொரு ‘முள்ளும் மலரும்’ படத்தை காண நாம் காத்திருப்போம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைத்தான் புதிய - வீடியோ


;