அஜித் - கௌதம் படத்தின் தவல்கள் விரைவில்...

அஜித் - கௌதம் படத்தின் தவல்கள் விரைவில்...

செய்திகள் 20-Feb-2014 10:12 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘டாக் ஆஃப் தி டவுன்’ வரிசையில் இடம்பிடித்திருக்கும் அஜித் - கௌதம் மேனன் கூட்டணியின் படம் குறித்து இன்று இருவரும் நேரில் சந்தித்து பேச இருக்கிறார்களாம். முழுமையான கதை, எப்படிப்பட்ட படம், படத்தின் டைட்டில், அஜித் இப்படத்திற்காக போடவிருக்கும் கெட்-அப், பட பூஜை குறித்த விஷயங்கள் என எல்லாம் இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. இதனையடுத்து இப்படத்தைப் பற்றிய முழுத்தகவல்களும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் படத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தில் முதன் முறையாக அஜித்துக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா. தற்போது ‘பாஹுபலி’, ‘ருத்ரம்மாதேவி’ படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அவர், விரைவில் கௌதம் படத்திற்கு கால்ஷூட் ஒதுக்கி படப்பிடிப்பில் கலந்து கொள்வாராம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் அனிருத், இப்படத்திற்கும் இசையமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகப்பிரம்மாண்டமான முறையில் இப்படத்தை தயாரிக்கிறார் ‘ஆரம்பம்’ படத்தின் தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சம் என்பது மடமையடா - தள்ளி போகாதே பாடல் வீடியோ


;