சிபிராஜை முந்திய மற்றொரு ஹீரோ!

சிபிராஜை முந்திய மற்றொரு ஹீரோ!

செய்திகள் 20-Feb-2014 9:38 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘நாணயம்’ படத்திற்குப் பிறகு வேறு எந்தப் படங்களிலும் ‘கமிட்’ ஆகாமல் இருந்த சிபிராஜ், ‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் மூலம் மீண்டும் ‘லைம்லைட்’டுக்கு வந்திருக்கிறார். இப்படத்தையும் இயக்குவது ‘நாணயம்’ படத்தின் இயக்குனரான ஷக்தி சௌந்தர்ராஜனே. ‘நாதாம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி’ சார்பாக சிபியின் தந்தை நடிகர் சத்யராஜ்தான் இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தின் பிரதான கதாபாத்திரம் ஏற்றிருக்கும் பெல்ஜியன் ஷெப்பர்ட் நாயின் ஒரிஜினல் பெயர் ‘இடோ’. ராணுவ பயற்சிபெற்ற இந்த நாய் தன் மோப்ப சக்தியை வைத்தே வெடிபொருட்களை கண்டுபிடிக்கும் திறன் வாய்ந்ததாம். அதோடு பத்தடி உயரம் வரை தாண்டும் திறமையையும் இந்த ‘இடோ’விற்கு இருக்கிறதாம்.

முதலில் இந்த கேரக்டரில் நடிக்க எந்த நாயும் கிடைக்காததால், அதுகுறித்து ட்விட்டரில் அறிவித்திருந்தாராம் சிபிராஜ். அதை வெங்கட் பிரபு ரீட்வீட் செய்ய, அதன் மூலமே இந்த நாயைப் பற்றிய தகவல் சிபிராஜிற்கு கிடைத்ததாம். குழந்தைகளுக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆக்ஷன் படத்தில் நாய் கேரக்டர்தான் படத்தின் முதல் ஹீரோவும். சிபிராஜுக்கு செகண்ட் ஹீரோதானாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சத்யா - டிரைலர்


;