2014ல் அதிக லாபம் தந்த படம் கோலிசோடா!

2014ல் அதிக லாபம் தந்த படம் கோலிசோடா!

செய்திகள் 19-Feb-2014 6:04 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இன்று நடைபெற்ற ‘சினேகாவின் காதலர்கள்’ திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார்,

“தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று கோர்ட்டில் தொடரப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்து எங்களுக்கு சாதகமான தீர்ப்பு அமைந்துள்ளது. இனி எங்களின் அதிரடியான திட்டங்கள் மூலம் சிறிய பட்ஜெட்டில் உருவாகும் தமிழ் திரைப்படங்களையும், தயாரிப்பாளர்களையும் காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

இந்த ஆண்டில் கடந்த இரண்டு மாதங்களில் வெளியான படங்களிலேயே எல்லோருக்கும் லாபம் சம்பாதித்து கொடுத்த படம் என்றால் அது ‘கோலி சோடா’ மட்டும்தான். மற்ற படங்கள் எல்லாமே ‘வெற்றி... வெற்றி...’ என்று சொல்லி ஏமாற்றியவைதான்.

எங்கள் சங்கத்தின் முதல் திட்டமாக இனிமேல் எடுக்கப்பட்டும் சிறிய, பெரிய படங்களை விளம்பரம் செய்ய அதிகபட்சமாக ரூ.40 லட்சம்தான் செலவு செய்ய வேண்டும் என்ற திட்டத்தை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளோம்!” என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொஞ்சம் கொஞ்சம் - டிரைலர்


;