விஜய் - ஏ.ஆர்.முருதாஸ் படத்தின் டைட்டில்?

விஜய் - ஏ.ஆர்.முருதாஸ் படத்தின் டைட்டில்?

செய்திகள் 19-Feb-2014 3:02 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘துப்பாக்கி’ படத்திற்கு அடுத்து மீண்டும் முருகதாஸின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு என்ன தலைப்பு வைப்பார்கள் என நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கிறார்கள் ‘தளபதி’யின் ரசிகர்கள். முதலில் இப்படத்திற்கு ‘வாள்’ என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அப்படத்திற்கு ‘வாள்’ என்ற பெயர் வைக்கப்படவில்லையாம். இப்போது விஜய்யின் 57வது படத்திற்கு ‘தீரன்’ என்ற பெயர் வைக்கப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து செய்திகள் கிடைத்துள்ளன. இதைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரலாம்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ‘தீரான்’ படத்தின் மூலம் முதல்முறையாக விஜய்க்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் அனிருத். ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சென்னை ஏர்போர்ட்டில் விஜய் நடிக்க சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கியிருக்கிறார்கள். இந்த வருடம் தீபாவளி வெளியீடாக வருவதற்கு திட்டமிட்டு உழைத்துக் கொண்டிருகிறது முருகதாஸ் டீம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;