தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியின் மூன்றாவது நாயகி!

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியின் மூன்றாவது நாயகி!

செய்திகள் 19-Feb-2014 2:57 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷும், இயக்குனர் வெற்றிமாறனும் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து ஒரு படத்தை உருவாக்குகிறார்கள். இப்படத்தில் மலைஉச்சியில் தேன் சேகரிக்கும் ரிஸ்க்கான கேரக்டரில் நடிக்கிறாராம் தனுஷ். இவருக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்க நடிகை அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த முதல் படமான ‘பொல்லாதவனி’ல் திவ்யா ஸ்பந்தனாவும், ‘ஆடுகளம்’ படத்தில் நடிகை டாப்ஸியும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்கள். இப்போது இந்த கூட்டணியின் மூன்றாவது நாயகியாக அமலா பால் வாய்ப்பு பெற்றிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் ‘வேலையில்லா பட்டாதாரி’ படத்தில் ஏற்கெனவே தனுஷும் அமலா பாலும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாக, படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டிரைலர்


;