ரஜினியின் இயக்குனருக்காக காத்திருக்கும் அனிருத்!

ரஜினியின் இயக்குனருக்காக காத்திருக்கும் அனிருத்!

செய்திகள் 19-Feb-2014 5:26 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘கொலவெறி’ பாடல் மூலம் உலகப்புகழ் பெற்ற அனிருத்தின் வளர்ச்சி, தமிழ்சினிமா உலகினரை வாய்பிளக்க வைக்கிறது. ‘3’, ‘எதிர்ச்சல்’, ‘வணக்கம் சென்னை’, ‘இரண்டாம் உலகம்’, ‘வேலையில்லா பட்டதாரி’ என இதுவரை 5 படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருக்கும் அனிருத், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கும் இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இதுதவிர அடுத்ததாக ‘தல’ அஜித்தின் படத்திற்கும் இசையமைக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார் அனிருத்.

இந்நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினியின் நெருங்கிய உறவினரான அனிருத்திடம் ‘‘ரஜினியின் படத்திற்கு எப்போது இசையமைக்கப் போகிறீர்கள்?’’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அனிருத் ‘‘ரஜினி சார்கூட ஒர்க் பண்றதுன்னா எல்லோருக்குமே ரொம்ப இஷ்டமான விஷயம்தான். அவர் என்னோட உறவினர் அப்படிங்கிறதுக்காக நான் அவர்கிட்ட போய் சான்ஸ் கேட்கிறது அவ்வளவு நல்லாயிருக்காது. அவரை வைத்து படமெடுக்கும் இயக்குனர்கள், நான் அவரோட படத்துக்கு மியூசிக் பண்ணினா சரியா இருக்கும்னு நினைச்சு என்னை கூப்பிட்டாதான் அதுல ஒரு சந்தோஷம் இருக்கும்!’’ என தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பத்மாவத் - டிரைலர்


;