வருகிறது ‘அம்மா திரையரங்கம்’?

வருகிறது ‘அம்மா திரையரங்கம்’?

செய்திகள் 19-Feb-2014 11:48 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பல அறிவிப்புகளால் தமிழக மக்கள் பலரும் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள். ஏற்கெனவே அம்மா உணவகம், அம்மா மினரல் வாட்டர், அம்மா பசுமை காய், கனி அங்காடி என பல திட்டங்களைச் செயல்படுத்திய முதல்வர் தற்போது சினிமா ரசிகர்களைச் சந்தோஷப்படுத்தும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருக்கிறார்.

தற்போது நடந்து கொண்டிருக்கும் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத் தொடரில் இதற்கான தீர்மானங்கள் ஏற்றப்பட்டு கொண்டிருக்கின்றன. அத்தியாசவசியப் பொருட்களை மலிவு விலையில் கொடுத்த தமிழக அரசு மக்களின் பொழுதுபோக்கு ஊடகமான திரையரங்குகளையும் அரசே அமைத்து, குறைந்த கட்டணங்களில் படங்களைத் திரையிட உள்ளதாம். ‘அம்மா திரையரங்கம்’ என்ற பெயரில் உருவாகவிருக்கும் இந்தத் திரையரங்கங்களில் சிறுமுதலீட்டுப் படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுறதாம்.

திருட்டு டிவிடிகள் ஒழிந்து சினிமாத்துறை வளர்ச்சியடைய ‘அம்மா திரையரங்கம்’ ஒரு தொடக்கமாக இருக்க வாழ்த்துவோம்..!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;