‘நிமிர்ந்து நில்’ ரிலீஸ் எப்போது?

‘நிமிர்ந்து நில்’ ரிலீஸ் எப்போது?

செய்திகள் 19-Feb-2014 11:17 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

அறிமுகமான ஒரு சில வருடங்களிலேயே மளமளவென முன்னுக்கு வந்த ஜெயம் ரவி திடீரென ‘பிரேக்’ அடித்ததுபோல் கொஞ்சம் ஸ்லோவானார். 2009ல் வெளிவந்த ‘பேராண்மை’ படத்திற்குப் பிறகு அவரின் நடிப்பில் வெளிவந்த படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. தன் முழு உழைப்பையும் கொட்டி வருடக்கணக்காக நாட்களை ஒதுக்கி நடித்த அமீரின் ‘ஆதி&பகவன்’ படமும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இப்படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.

இதனையடுத்து தற்போது மீண்டும் இரட்டை வேடங்களில் ஜெயம் ரவி நடித்திருக்கும் ‘நிமிர்ந்து நில்’ படம் வரும் மார்ச் மாதம் 7ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சமுத்திரக்கனி இயக்கும் இப்படத்தில் ரவிக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருக்கிறார். இவர்களோடு சரத்குமார், ராகினி திரிவேதி, சூரி, ‘நீயா நானா’ கோபிநாத், நாசர், தம்பி ராமையா, சுப்பு பஞ்சு, படவா கோபி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். வாசன் விஷுவல் வெஞ்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ்.

இப்படம் மார்ச் 7ல் ரிலீஸுக்குத் தயாராக இருக்க, அறிமுக இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் த்ரிஷாவுடன் ஜெயம் ரவி நடிக்கும் ‘பூலோகம்’ படத்தின் வேலைகளும் முடிவடையும் தருவாயில் இருப்பதால், இப்படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டிரைலர்


;