அஜித்தின் புது இசையமைப்பாளர்!

அஜித்தின் புது இசையமைப்பாளர்!

செய்திகள் 19-Feb-2014 10:22 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

அஜித் படத்திற்கு இசையமைப்பதென்றால் உடனே ஓகே சொல்ல அத்தனை மியூசிக் டைரக்டர்களும் தயாராக இருப்பார்கள். சமீபத்திய அஜித் படங்களில் அதிக படங்களுக்கு இசையமைத்தவர் யுவன் ஷங்கர் ராஜாதான். அஜித் கடைசியாக நடித்த ‘வீரம்’ படத்திற்கு இசையமைத்தவர் தேவி ஸ்ரீபிரசாத்.

இதனையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கப் போவது யார் என்பதுதான் ‘தல’ ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் விஷயம். முதலில் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார் என செய்திகள் வெளியாகின. ஆனால், அவர் கௌதம் மேனனின் இன்னொரு படமான சிம்பு நடிக்கும் படத்திற்குதான் இசையமைக்கிறார் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின. இதனால் ‘தல’ ரசிகர்கள் கொஞ்சம் சேர்ந்துபோனது உண்மைதான்.

இது ஒருபுறமிருக்க, அஜித்தின் படமொன்றிற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அது எந்தப் படம் என்பது குறித்த செய்தி இன்னும் கசியவில்லை. கூட்டி கழித்துப் பார்க்கும்போது, கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கே அனிருத் இசையமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யின் 57வது படத்திற்கும் அனிருத்தே இசையமைப்பதால், ‘தல தளபதி’ ரசிகர்களை ஒரே நேரத்தில் சந்தோஷப்படுத்தும் அதிர்ஷ்டசாலியாக மாறியிருக்கிறார் அனிருத்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;