விஷாலுக்கு வந்த புது வியாதி!

விஷாலுக்கு வந்த புது வியாதி!

செய்திகள் 19-Feb-2014 9:58 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தலைப்பைப் படித்ததும் ‘என்னமோ ஏதோ...’ என பதற வேண்டாம். விஷாலுக்கு வியாதி வந்திருப்பது நிஜத்தில் அல்ல. அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘நான் சிவப்பு மனிதன்’ படத்தில்தான். சினிமா ஹீரோக்களுக்கு வியாதி வருவது காலம் காலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தக்கால படங்களில் வரும் கேன்சரிலிருந்து சூப்பர்ஹிட்டான ‘கஜினி’யின் ஷார்ட்டெர்ம் மெமரிலாஸ், சமீபத்திய ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ படத்தின் மெடுல்லா ஆப்ளங்கேட்டாவில் அடி பட்டதால் ஏற்படும் மறதி வியாதி என ஏகப்பட்ட நோய்களுக்கு நம்மூர் ஹீரோக்கள் ஆளாகியிருக்கிறார்கள்.

ஆனால், தற்போது ‘நான் சிகப்பு மனிதன்’ விஷாலுக்கு வந்திருப்பது கொஞ்சம் புதுமாதிரியான வியாதிதான். அதாவது நன்றாக இருக்கும்போதே திடீரென மயங்கி விழுந்துவிடுகிறார் விஷால். அவர் அப்படி மயங்கி விழுவது உண்மையில் ஒருவித தூக்கநிலைக்கு செல்வது போன்றதாம். அதிகப்படியான சந்தோஷமோ, துக்கமோ, பயமோ, கோபமோ வந்தால் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தூக்கநிலைக்குச் சென்றுவிடுவார்களாம். இந்த புதுமாதிரியான வியாதிக்கு ‘நார்கோலெப்ஸி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்த ‘நார்கோலெப்ஸி’ வியாதியால் விஷால் எப்படி பாதிக்கப்பட்டார்? கோபம் கொண்டு எதிரிகளிடம் சண்டை போடச் சொல்லும்போது தூக்கம் வராமலிருக்க என்ன செய்யப் போகிறார்? அதிக சந்தோஷத்தைக் கொடுக்கும் காதலியிடம் தூங்காமலிருந்து எப்படி ரொமான்ஸ் செய்யப் போகிறார்? அதிலிருந்து மீள்கிறாரா இல்லையா? என்பதை காமெடி, காதல் கலந்த ஆக்ஷன் கதையாக சொல்லவிருக்கிறது ‘நான் சிவப்பு மனிதன்’ படம்.

யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை இயக்குவது இயக்குனர் திரு. ஏற்கெனவே விஷாலின் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘சமர்’ போன்ற படங்களை இவர் இயக்கியிருக்கிறார். ‘நான் சிவப்பு மனிதன்’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக லக்ஷ்மிமேனனும், இன்னொரு நாயகியாக இனியாவும், காமெடியனாக ‘நண்டு’ ஜெகனும் நடிக்கிறார்கள். ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவை கவனிக்க, இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ். வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது இப்படம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;