நாளை முதல் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா!

நாளை முதல் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா!

செய்திகள் 18-Feb-2014 6:05 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சேட்டை’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் கே.கண்ணன் இயக்கும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தின் படப்பிடிப்பு நாளைமுதல் தொடங்க இருக்கிறது. விமல், ப்ரியா ஆனந்த், சூரி ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். நாளை தொடங்கி தொடர்ந்து 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்த இருக்கும் கண்ணன், டி.இமான் இசையில் உருவான மெலடி பாடல் ஒன்றின் பாடல் காட்சியையும் படமாக்க இருக்கிறார். மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் பி.ஜி.முத்தையா.

இயக்குனர் கண்ணன் வழக்கமாக ஒரு ரீமேக் படம் அடுத்தது ஒரு நேரடித் தமிழ்ப்படம் என்ற முறையிலேயே படங்களை இயக்குவார். அவரின் முதல்படமான ‘ஜெயம்கொண்டான்’ நேரடிப் படம். அதனைத் தொடர்ந்து இயக்கிய ‘கண்டேன் காதலை’ ரீமேக். அதைத் தொடர்ந்து ‘வந்தான் வென்றான்’ நேரடிப் படமாகவும், ‘சேட்டை’ ரீமேக் படமாகவும் அமைந்தது. அந்த வரிசையில் தற்போது இயக்கும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படம் அவரின் நேரடித் தமிழ்ப்படமாகும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - டிரைலர்


;