செஞ்சுரி அடித்த கௌதம் மேனனின் பாட்டி!

செஞ்சுரி அடித்த கௌதம் மேனனின் பாட்டி!

செய்திகள் 18-Feb-2014 4:17 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சினிமாவில் எவ்வளவு பிசியாக இருந்தாலும், வருடத்திற்கு ஒரு முறையாவது தன் சொந்த ஊருக்கு விசிட் அடித்து, தன் உறவினர்களை பார்த்து மகிழ்ந்து வருவது இயக்குனர் கௌதம் மேனனின் வழக்கம்! இவரது சொந்த ஊர் கேரளாவிலுள்ள ஒற்றப்பாலம்! அங்கு கௌதம் மேனனின் பாட்டி (தந்தையின் தாயார்…) மற்றும் பல உறவினர்கள் வசித்து வருகிறார்கள்! இவர்களில், கௌதம் மேனனின் பாட்டிக்கு இப்போது 100 வயதாம்! சமீபத்தில் இவரது 100-ஆவது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடியுள்ளனர்.

இப்போது சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மற்றும் அடுத்து அஜித்தை வைத்து இயக்குவதற்கான படத்தின் வேலைகளில் பிசியாக இருக்கிறார் கௌதம் மேனன்! இருந்தாலும் அந்த வேலைகளுக்கெல்லாம் பிரேக் கொடுத்துவிட்டு, கேரளா சென்று பாட்டியின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு சென்னை திரும்பியுள்ளார் கௌதம் மேனன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - டீசர்


;