மலையாள சினிமாவை ஆட்டிப்படைக்கும் அஜித்!

மலையாள சினிமாவை ஆட்டிப்படைக்கும் அஜித்!

செய்திகள் 18-Feb-2014 1:28 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரு காலத்தில் சினிமா நடிகர்களை, அதிலும் குறிப்பாக ஹீரோக்களை நிஜத்திலும் சரி, சினிமாவிலும் சரி நரைத்த தலைமுடி, தாடியுடன் பார்க்க முடியாது! வயதான நடிகர்கள் கூட ’டை’ அடித்து, கருத்த தலைமுடியுடன்தான் காட்சி அளிப்பார்கள்! தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த நிஜத்தை முதலில் உடைத்தவர் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். சினிமாவில் மட்டுமே மேக்-அப் போட்டு நடித்து வந்த அவர் நிஜத்தில் மேக்-அப் போடுவதில்லை! வழுக்கை தலை, நரைத்த முடியுடனேயே வெளியில் வலம் வருவார்.

சூப்பர் ஸ்டார் இப்படி என்றால், சினிமாவில் கூட மேக்-அப் வேண்டாம் என்று நரைத்த தலைமுடி, தாடியுடன் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ’தல’ அஜித்! தனது சால்ட் அன்ட் பெப்பர் லுக்குடன் அவர் நடித்த ‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’, ‘வீரம்’ ஆகிய படங்கள் இந்த சென்டிமென்ட்டோடு வெற்றி பெற, அஜித்தின் இந்த ஸ்டைலை இப்போது மலையாள படவுலகின் பல ஹீரோக்களும் ஃபாலோ பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள்! அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்!

மம்முட்டி தற்போது நடித்து வரும் ‘கேங்ஸ்டர்’ படத்தில் அவர் 5 மாறுபட்ட கெட்-அப்களில் நடிக்கிறார். இதில் ஒரு கெட்-அப்பில் முழுக்க முழுக்க நரைத்த தலைமுடி, தாடியுடன் வருகிறார்!. ஜோஷி இயக்கும் ‘லைலா ஓ லைலா’, உன்னி கிருஷ்ணன் இயக்கும் ‘மிஸ்டர் ஃப்ராட்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடிக்கும் மோகன்லால், ‘தல’யை போன்று சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில்தான் நடிக்கிறார். மலையாளத்தின் இன்னொரு முன்னணி ஹீரோ பிருத்திவிராஜ். இவர் தற்போது நடித்து வரும் ‘செவன்த் டே’. இப்படத்தில் 42 வயதுடைய போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இவருக்கும் நரைத்த முடி தானாம்!

இவர்கள் மட்டுமல்லாமல் மலையாளத்தின் பிரபல நடிகர்களான பிஜு மேனன் ’பகிடா’ என்ற படத்திலும், பிஜு மேனன், ’பட்டி’ என்ற படத்திலும் ’தல’யின் நரை ஸ்டைலை ஃபாலோ செய்து மாறுபட்ட கெட்-அப்களில் அசத்தியிருக்கிறார்கள்! ஆக, அஜித்தின் ’சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைல்’ இப்போது மோலிவுட்டையும் ஆட்டிப் படைக்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;