லிங்குசாமியை அழவைத்த படம்!

லிங்குசாமியை அழவைத்த படம்!

செய்திகள் 18-Feb-2014 1:07 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஃபாக்ஸ் ஸ்டார் மற்றும் தி நெக்ஸ்ட் பிக் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘குக்கூ’. இப்படத்தை கல்கி, ஆனந்தவிகடன், இதயம் பேசுகிறது உள்ளிட்ட பத்திரிகைகளில் செய்தியாளராகவும் இயக்குனர் லிங்குசாமியிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய ராஜுமுருகன் இயக்கியுள்ளார். ‘அட்டகத்தி’ தினேஷ், மாளவிகா நாயர் ஆகியோர் பார்வையற்ற காதலர்களாக இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. இவ்விழாவில் கமல்ஹாசன் கலந்துகொண்டு ஆடியோவை வெளியிட சூர்யா பெற்றுகொண்டார். டிரைலரை எழுத்தாளர் வண்ணதாசன் வெளியிட லிங்குசாமி பெற்றுக்கொண்டார்.

விழாவில் பேசிய இயக்குனர் லிங்குசாமி, ‘‘இப்படத்தை இயக்கிய ராஜுமுருகன் ‘ஆனந்தம்’ படத்தின் போது என்னை பேட்டி எடுக்க வந்தார். ரொம்பவும் பாஸிட்டிவான இளைஞர் அவர். நிச்சயம் என்னை மாதிரி படங்கள் எடுக்க மாட்டார். சேரன், பாலா, தங்கர்பச்சான் மாதிரியானவர்களைப் போன்றவர். ‘ஆனந்தம்’ படம் எடுக்கும் போது எந்த மாதிரியான ஒரு படபடப்பிருந்ததோ அதேபோன்ற படப்படப்பு இந்தப்படத்திற்கும் இருக்கிறது. இப்படத்தின் டிரைலர், பாடல் காட்சிகளைப் பார்த்து அழுதுவிட்டேன். இந்தப்படத்திற்கு என்ன தேவையென்றாலும் என்னால் முடிந்தவரை செய்கிறேன்’’ என உணர்ச்சி பொங்கப் பேசினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கதாநாயகன் - டிரைலர்


;