தொடங்கியது கமலின் ‘உத்தமவில்லன்’!

தொடங்கியது கமலின் ‘உத்தமவில்லன்’!

செய்திகள் 18-Feb-2014 1:02 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இன்று காலை சத்யம் திரையரங்கில் ‘குக்கூ’ படத்தின் ஆடியோ சிடியை கமல் வெளியிட சூர்யா பெற்றுக்கொண்டார். விழாவிற்கு சிறிது தாமதமாக வந்த கமல், அதற்கான காரணத்தை மேடையிலேயே விளக்கியதும் உலகநாயகன் ரசிகர்களுக்கு அளவில்லாத சந்தோஷம். லிங்குசாமியின் தயாரிப்பில் கமல் நடிக்கும் ‘உத்தமவில்லன்’ படத்திற்கான படப்பிடிப்பு தளங்களை பார்வையிடுவதற்காக மத்தியபிரதேசம் வரை சென்றுவிட்டு, இன்று காலையில்தான் திரும்பியிருக்கிறார் கமல். அதனால்தான் தன்னால் விழாவிற்கு குறித்த நேரத்தில் வரமுடியவில்லை என்று அவர் தெரிவித்தார். ‘விஸ்வரூபம் 2’விற்காக அனைவரும் காத்துக்கொண்டிருக்கும் இந்தவேளையில் ‘உத்தமவில்லன்’ படவேலையும் துவங்கியிருப்பது ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;