கமல், விஜய்யை தொடர்ந்து ஆர்யாவுடன்..

கமல், விஜய்யை தொடர்ந்து ஆர்யாவுடன்..

செய்திகள் 18-Feb-2014 11:41 AM IST VRC கருத்துக்கள்

’ஜில்லா’வில் விஜய்யுடன் இணைந்து நடித்த மோகன்லால், தமிழில் வருடத்திற்கு ஒரு படம் என்ற கணக்கில் நடிக்க இருக்கிறாராம்! அதன்படி அவர் அடுத்து நடிக்கவிருக்கும் படம் ஹிந்தி ‘இஷ்கியா’வின் தமிழ் ரீ-மேக் என்று கூறப்படுகிறது! 2010-ல் ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘இஷ்கியா’வை தமிழின் ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனம் ரீ-மேக் செய்ய திட்டமிட்டிருக்கிறது. ’இஷ்கியா’வில் நஸ்ருதீன் ஷா, அர்ஷத் வர்சி, வித்யா பாலன் முதலானோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தார்கள். இதில் நஸ்ருதீன் ஷா நடித்த கேர்கடரில் மோகன்லாலும், அர்ஷத் வர்சி நடித்த கேர்கடரில் ஆர்யாவும், வித்யா பாலன் நடித்த கேர்கடரில் லட்சுமி ராயும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு திருடர்களை பற்றிய இந்த கதையில் மோகன்லால் ‘ஜில்லா’வில் தோன்றி நடித்தது மாதிரி நரைத்த தலை முடி, தாடி கெட்-அப்பிலேயே நடிக்க இருக்கிறாராம்! படத்திற்கான இயக்குனர், இசை அமைப்பாளர் போன்ற விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லை என்று கூறப்படுகிறது.

தமிழை பொறுத்தவரை மோகன்லால் தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்த பெரும்பாலான படங்களும் வெற்றி பெற்றுள்ளன! இதற்கு உதாரணமாக அவர் பிரகாஷ் ராஜுடன் நடித்த ’இருவர்’, ஜீவாவுடன் இணைந்து நடித்த ‘அரண்’, கமல்ஹாசனுடன் நடித்த ‘உன்னைப்போல ஒருவன்’, விஜய்யுடன் நடித்த ’ஜில்லா’ ஆகிய படங்களை குறிப்பிடலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;