மீண்டும் இணையும் மீனா, நதியா!

மீண்டும் இணையும் மீனா, நதியா!

செய்திகள் 18-Feb-2014 9:52 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர் பிரபுவின் 100வது படமான ‘ராஜகுமாரனி’ல் இணைந்து நடித்தவர்கள் மீனாவும், நதியாவும். தற்போது இந்த கதாநாயகிகள் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். ஆனால், அவர்கள் நடிக்க இருப்பது தமிழில் அல்ல, தெலுங்கில்!

மலையாளத்தின் வரலாற்று வெற்றிப்படம் என்ற பெருமையோடு இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘திருசியம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நாயகனாக நடிக்கிறார். மலையாளத்தில் ஜார்ஜ் குட்டியின் மனைவியாக நடித்த மீனாவே, தெலுங்கில் வெங்கடேஷுக்கும் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் பெரிதும் பேசப்பட்ட பெண் போலீஸ் வேடத்தில் நதியா நடிக்கிறார். தமிழில் கதாநாயகிகளாக ஒரு காலத்தில் இணைந்து கலக்கிய இந்த ஜோடி தற்போது தெலுங்கில் கூட்டணி அமைத்து அடுத்து வெற்றிக்காக களமிறங்கி இருக்கிறது. ‘22 ஃபிமேல் கோட்டயம்’ மலையாளப் படத்தை தமிழில் ‘மாலினி 22 பாளையங்கோட்டை’யாக மாற்றிய ஸ்ரீபிரியாதான் தெலுங்கில் ‘திருசியம்’ ரீமேக்கையும் இயக்குகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;