லட்சத்தீவில் ஸ்வாதி!

லட்சத்தீவில் ஸ்வாதி!

செய்திகள் 17-Feb-2014 6:08 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை தொடர்ந்து ‘வடகறி’ படத்தில் நடித்து வரும் ’சுப்ரமணியபுரம்’ புகழ் ஸ்வாதி, ‘மோசயிலெ குதிரமீனுகள்’ என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார். லட்சத்தீவின் பின்னணியில் அஜித் பிள்ளை இயக்கி வரும் இந்தப் படத்தில் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடிக்கிறார் ஸ்வாதி! இதில் கதையின் நாயகர்களாக சன்னி வைன், ஆசிஃப் அலி ஆகியோர் நடிக்க, ஸ்வாதி அந்தத் தீவில் சுற்றித் திரியும் பெண்ணாக, வித்தியாசமான மேக்-அப்பில், மாறுபட்ட ஒரு மொழியை பேசி நடிக்கிறார். ஏற்கெனவே ‘ஆமேன்’, ‘நார்த் 24 காதம்’ ஆகிய மலையாள படங்களில் நடித்துள்ள ஸ்வாதி, இந்தப் படமும் தனக்கு மலையாளத்தில் ஒரு வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வெள்ளை கனவு வீடியோ பாடல் - புரியாத புதிர்


;