பிரிவுத் துயரத்தில் சிம்பு!

பிரிவுத் துயரத்தில் சிம்பு!

செய்திகள் 17-Feb-2014 2:23 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாண்டிராஜின் ‘இது நம்ம ஆளு’, கௌதம் மேனனின் புதிய படம் என பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் சிம்புவிற்கு ஷூட்டிங் இல்லாத நாட்களில் வீட்டில் இருப்பதற்கே தற்போது பிடிக்கவில்லை என ‘ட்வீட்’டியிருக்கிறார். இப்படி அவர் அதிரடியாக ஸ்டேட்மென்ட் விட்டதற்குக் காரணம் என்ன தெரியுமா?

சமீபத்தில் சிம்புவின் தங்கை இலக்கியாவிற்கு திருமணம் முடிந்து, தற்போது அவர் புகுந்த வீட்டில் குடியேறியிருக்கிறார். வீட்டில் இருக்கும்போது தங்கை இலக்கியாவுடன் அரட்டை அடித்து ஜாலியாக பொழுதைக் கழித்த சிம்புவிற்கு தற்போது அவர் இல்லாததால் பிரிவுத் துயரம் வாட்டி எடுக்கிறதாம். காதல் பிரிவுத் துயரத்தைவிட தங்கையைப் பிரிந்திருக்கும் இந்த வலி அதிகமாக இருக்கிறது என ஃபீலிங் சாங் பாடியிருக்கிறார் சிம்பு. அவர் தன்னுடன் இல்லாததை நினைத்தால் வரும் அழுகையைக்கூட தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை எனக் கூறி ட்விட்டரில் ‘தங்கைக்கோர் கீதம்’ இயற்றியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;