மலையாளத்தில் விஜய்சேதுபதி படம்!

மலையாளத்தில் விஜய்சேதுபதி படம்!

செய்திகள் 17-Feb-2014 12:57 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

மலையாளத்தில் வெற்றி பெற்ற பல படங்கள் தமிழில் ரீ-மேக் ஆகிக் கொண்டிருக்க, ஒருசில தமிழ் படங்கள் மலையாளத்திலும் ரீ-மேக் ஆகிக் கொண்டிருக்கிறது. ‘வழக்கு எண் 18/9’ படம் ‘பிளாக் பட்டர்ஃப்ளை’ என்ற பெயரில் மலையாளத்தில் ரீ-மேக் ஆனதை தொடர்ந்து, தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படமும் மலையாளத்தில் ரீ-மேக் ஆகியுள்ளது. ‘மெடுலா ஒப்ளாம் கட்டா’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ‘வேந்தர் மூவிஸ்’ எஸ்.மதன் தயாரித்துள்ளார். இவர் தயாரிக்கும் முதல் மலையாள படம் இது. இந்தப் படத்தில் ராகுல் மாதவ், சைஜு ஜி.குறுப்பு, அர்ஜுன் நந்தகுமார், ராகேந்து குமார் முதலானோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்க, சுரேஷ் நாயர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கவண் - தீராத விளையாட்டு பிள்ளை பாடல் வீடியோ


;