சதாவுக்கு இன்று இனிய நாள்!

சதாவுக்கு இன்று இனிய நாள்!

செய்திகள் 17-Feb-2014 12:42 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சதா! இந்தப் படத்தை தொடர்ந்து ‘அந்நியன்’, ‘திருப்பதி’, ‘பிரியசகி’ என பல படங்களில் நடித்த சதா, ஒரு சில தெலுங்கு, ஹிந்தி, மலையாள, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். ‘ஜெயம்’, ‘அந்நியன்’ ஆகிய இரண்டு படங்கள் போதும் சதாவின் திறமையை எடுத்துச் சொல்ல! இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த படம் பி.வாசு இயக்கிய ‘புலிவேஷம்’! இந்த படத்தை தொடர்ந்து தற்போது தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் சதாவுக்கு இன்று பிறந்த நாள்! லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் இன்னமும் கனவு தேவதையாக திகழ்ந்து வரும் சதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமிதம் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - டிரைலர்


;