மீண்டும் தமிழில் ஐஸ்வர்யா ராய்!

மீண்டும் தமிழில் ஐஸ்வர்யா ராய்!

செய்திகள் 17-Feb-2014 12:48 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த ‘சந்திரமுகி’யை இயக்கியவர் பி.வாசு! இந்தப் படத்தை தொடர்ந்து அவர் பல படங்களை இயக்கினாலும் அவை பெயர் சொல்லும் படியாக அமையவில்லை. இந்நிலையில் அடுத்து பிரம்மாண்டமான முறையில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார் பி.வாசு. இதற்காக கடந்த இரண்டரை வருடங்களாக ஒரு ஸ்கிரிப்ட்டை உருவாக்கி, அதற்கு ‘ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்’ என்று பெயர் வைத்துள்ளார். இந்த ஸ்கிரிப்ட் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ளதாம். இதில் நடிக்க, ஐஸ்வர்யா ராய் ரொம்பவும் பொருத்தமானவர் என்று கருதிய பி.வாசு, அவரிடம் இந்த கதையை சொல்ல, ஐஸுக்கு கதை ரொம்பவும் பிடித்துவிட்டதால் அவர் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம்! பிரமிக்க வைக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுடன் அனிமேட்ரானிக்ஸ் படமாக இது உருவாக இருக்கிறது! தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை ‘குளோபல் ஒன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பாக கே.ரமேஷ் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்கான மற்ற நடிகர் - நடிகைகளின் தேர்வு தற்போது நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைத்தான் புதிய - வீடியோ


;