ஹேப்பி பர்த்டே சிவகார்த்திகேயன்!

ஹேப்பி பர்த்டே சிவகார்த்திகேயன்!

செய்திகள் 17-Feb-2014 12:37 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தொலைக்காட்சியிலிருந்து, சினிமாவுக்கு வந்து வெற்றி பெற்றவர்களில் நடிகர் சிவகார்த்திகேயன் குறிப்பிடத்தக்கவர்! பாண்டிராஜ் இயக்கிய ‘மெரினா’ படத்தின் முலம் தமிழ் சினிமாவில் கதாநாயக நடிகராக களம் இறங்கியவர்! தனது முதல் படத்தின் மூலமே பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்து, தொடர்ந்து ‘மனம் கொத்தி பறவை’, ‘எதிர்நீச்சல்’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என பல வெற்றிப் படங்களை வழங்கியவர்! இன்று தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஹீரோவாக திகழ்ந்து வரும் சிவகாத்திகேயன் பிறந்த நாள் இன்று! லட்சக்கணக்கான ரசிகர்களின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் கொண்டாடும் சிவகார்த்திகேயனுக்கு ’டாப் 10 சினிமா’வும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - கருத்தவன்லாம் கலீஜாம் ஆடியோ பாடல்


;