காமெடி நடிகரை அழ வைத்த சிரஞ்சீவி!

காமெடி நடிகரை அழ வைத்த சிரஞ்சீவி!

செய்திகள் 17-Feb-2014 12:47 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தெலுங்கு படவுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம்! இவர், ‘மொழி’, ‘வானம்’, ‘சத்தியம்’ என பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தனது மகன் கௌதமையும் தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்தியிருக்கிறார் பிரம்மானந்தம்! கௌதம் நடித்த படம் ’பசந்தி’. இந்தப் படத்தின் புரொமோஷன் வேலைகள் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது. இதில் தெலுங்கின் பிரபல நடிகர்களான அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு, பவன் கல்யாண், பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர்., இயக்குனர்கள் ராஜமௌலி, வி.வி.விநாயக், சீனு வைட்லா முதலானோர் கலந்துகொண்டு கௌதமை வாழ்த்தியுள்ளனர். டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியிடம் வாழ்த்துப்பெற அவரது வீட்டிற்கு சென்ற கௌதமை வாழ்த்திய சிரஞ்சீவி, ‘‘கௌதம் என் மகன் மாதிரி! என் மகன் ராம்சரண் பெற்ற வெற்றியை விட கௌதம் பெரிய வெற்றியை பெறவேண்டும்’’ என்று வாழ்த்தியுள்ளார்! தனது மகனை ஆத்மார்த்தமாக வாழ்த்தி, சிரஞ்சீவி உதிர்த்த வார்த்தைகளை கேட்டதும் பிரம்மானந்தம் கண்களில் சந்தோஷ கண்ணீர் வடிந்ததாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 பகுதி 2- தி ரோட் ட்ரிப் வீடியோ


;