விஜய்யை முந்திய ரஜினி!

விஜய்யை முந்திய ரஜினி!

செய்திகள் 15-Feb-2014 2:34 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்துள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது! ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘எந்திரன்’. இந்தப் படம் வெளியாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் ரஜினியை திரையில் காண ரசிகரகள் ஆவலாய் காத்திருக்க, ‘கோச்சடையான்’ மீதுள்ள எதிர்பார்ப்புக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

படம் எப்போது ரிலீசாகும் என்ற கேள்வியோடு இருந்த ரசிகர்களுக்கு, சமீபத்தில் வெளியான ’கோச்சடையான்’ டிரைலர் ஒரு ஆறுதலாய் அமைய, இதுவரை 40 லடசத்திற்கும் மேற்பட்டோர் அதை பார்த்திருக்கின்றனர். இதுவரை எந்த ஒரு தமிழ் படத்தின் டிரைலருக்கும் கிடைக்காத மிகப் பெரிய வரவேற்பு இது! இதுவரை விஜய் நடித்த ‘தலைவா’ படத்தின் டிரைலர் தான் அதிக ரசிகர்களின் வரவேற்பில் (20 லட்சத்திற்கும் மேல்) இருந்தது. இப்போது விஜய்யின் சாதனையை கிட்டத்தட்ட டபுள் மடங்கு வரவேற்பு பெற்று ரஜினியின் ‘கோச்சடையான்’ முறியடித்துள்ளது. இது ரஜினிக்கு ரசிகர்களிடத்தில் இருக்கும் மிகப் பெரிய வரவேற்பை தான் காட்டுகிறது என்பதை நாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஏற்கெனவே பல முறை இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதிகள் அறிவிக்கப்பட்டு, பின்னர் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் இப்போது இம்மாதம் 28-ஆம் தேதி ஆடியோ வெளியீட்டு விழா என்று அறிவித்திருக்கிறார்கள்! ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி ‘கோச்சடையான்’ ஆடியோ வெளியீட்டு ஃபிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெறாது என்றும், இன்னும் சில நாட்கள் கழித்துதான் நடக்கும் என்றும் கூறப்படுகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;