சந்திரா

உப்பு சப்பில்லாத திரைக்கதை

விமர்சனம் 15-Feb-2014 1:44 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சந்திரா’ படத்தை இயக்கியிருப்பவர் நடிகர், இயக்குனர், மாடல், சமூகநலவாதி என பன்முகங்களை கொண்ட ரூபா அய்யர். ஃபேன்டசி லவ் ஸ்டோரியாக எழுதி இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு P.H.K.தாஸ், இசை கௌதம் ஶ்ரீவத்சா. ராஜ வம்சத்து இளவரசியாக ஸ்ரேயா, இளவரசனாக (அமெரிக்க மாப்பிள்ளையாக) கணேஷ் வெங்கட்ராமன். இளவரசி ஸ்ரேயாவின் குடும்ப நண்பராக (பல கலைகளில் நிபுணர்) பிரேம். இளவரசி சந்திராவதியாக வரும் ஸ்ரேயா பாரம்பரியமான ராஜ வம்சத்தை சேர்ந்தவர். இவருக்கு பாடல் சொல்லிக் கொடுக்க வருகிறார் பல்கலைகளில் நிபுணராக விளங்கும் சந்திரஹாசன் (பிரேம்). பாடல் கற்பதில் ஆரம்பிக்கும் இவர்களது நட்பு காதலாக மாறுகிறது. இதற்கிடையில் ஸ்ரேயாவிற்கு அவர்களது ராஜ வம்சத்தை சேர்ந்த அமெரிக்காவில் இருக்கும் கணேஷ் வெங்கட்ராமனை திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர். ஸ்ரேயா மறுக்கிறார் இந்த திருமணத்திற்கு! வழக்கம் போல எதிர்ப்பு! பிறகு காதலர்கள் சேர்ந்துகொள்ள சுபம். ஒளிப்பதிவு, அரங்க வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, இசை அபாரம். மற்றது எல்லாம் அபத்தம். இயக்குனர் ரூபா அய்யர் ஸ்ரேயாவின் இடுப்பழகிலேயே கவனம் செலுத்தியுள்ளார். அவரை எப்படியெல்லாம் அழகாக காண்பிக்க வேண்டுமோ காண்பித்துள்ளார். ஆனால் வலுவே இல்லாத கதையில் உப்பு சப்பில்லாத திரைக்கதையால் படம் பார்ப்பவர்களை தூங்கச் செய்தும், பாதியிலேயே ஓடச் செய்தும் உள்ளார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பேட்ட ட்ரைலர்


;