காதலர் தினத்தன்று பரபரப்பு ஏற்படுத்திய ரீமா கல்லிங்கல்!

what happened to Reema Kallingal

செய்திகள் 15-Feb-2014 11:43 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர் ஆஷிக் அபுவை காதல் திருமணம் செய்து கொண்டவர் நடிகை ரீமா கல்லிங்கல். இவர் காதலர் தினத்தையொட்டி தனது ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்திருந்த ஒரு படமும், அதனையொட்டி தரப்பட்டிருந்த ஒரு கேப்ஷனும் எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கும்! இப்படி அதிர்ச்சி அடைய வைக்கக் கூடிய வகையில் ரீமா எதை போஸ்ட் செய்திருந்தார் என்கிறீகளா? இரண்டு ஸ்ட்ரா இணைந்தவாறு இருக்கும் ஒரு காக்டெயில் டிரிங் படம் மற்றும் அத்துடன் தரப்பட்ட ‘செக்ஸ் ஆன் த பீச்’ என்ற வாசகமும்!

‘செக்ஸ் ஆன் த பீச்’ என்ற வாசகத்தை படித்ததும், ச்சே.., ரீமா கல்லிங்கலா இப்படி? என்று ஏராளமான ரசிகர்கள் ரீமாவின் போஸ்ட்டுக்கு தாறுமாறான கமென்ட்ஸ் செய்ய, ஒரு சில ரசிகர்களோ, ‘செக்ஸ் ஆன் த பீச்’ என்றால் அது ஒரு வகை காக்டெயில் டிரிங் என்று கமென்ட் செய்து, தங்களது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தினார்கள்!

வோட்கா, ஆரஞ்சு ஜூஸ், காட்பரி ஜூஸ் முதலியவற்றை கலந்து உருவாக்கும் ஒரு பிரபல டிரிங்காம் இந்த ‘செக்ஸ் ஆன் த பீச்’! காதலர் தினத்தன்று இப்படியும் ஒரு பப்ளிசிட்டி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;