'ஜெயம்' ரவி படத்திற்கு 'யு'

Clean 'U' for Jeyam Ravi

செய்திகள் 15-Feb-2014 10:20 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘நான் கடவுள்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்த நிறுவனம் ‘வாசன் விஷுவல் வென்ஞ்சுர்ஸ்’. இந்த நிறுவனம் தற்போது தயாரித்துள்ள படம் ‘நிமிர்ந்து நில்’. சமுத்திரகனி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ‘ஜெயம்’ ரவி, அமலா பால் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். ‘பெரிதினும் பெரிது கேள்’ என்ற பொருள்படும் படி வித்தியாசமான கதை அமைப்புடன் உருவாகியுள்ள படமாம் இது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். சமுத்திரகனி, ‘ஜெயம்’ ரவி, அமலா பால் முதன் முதலாக இணைந்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடவுள் இருக்கான் குமாரு - கும் சாரே பாடல் வீடியோ


;