‘நேரம்’ டீமின் அடுத்த படம்!

‘நேரம்’ டீமின் அடுத்த படம்!

செய்திகள் 14-Feb-2014 4:08 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் மற்றும் மலையாளத்தில் ஹிட்டான ‘நேரம்’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் அல்ஃபோன்ஸ் புத்திரன் – நடிகர் நிவின் பாலி மீண்டும் இணைகிறார்கள். ‘நேரம்’ படத்தைத் தொடர்ந்து மலையாளத்தில் ஹிட்டான ’ஷட்டர்’ என்ற படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்ய திட்டமிட்டிருந்தார் அல்போன்ஸ் புத்திரன்.

ஆனால் இப்போது அந்த திட்டத்தை தள்ளி வைத்துவிட்டு, ’பிரேமம்’ என்ற பெயரில் மலையாள படத்தை இயக்க இருக்கிறார்! ‘நேரம்’ படத்தில் பணியாற்றிய பலரும் இதிலும் பணியாற்ற இருக்கிறார்கள். ’பிரேமம்’ என்றால் தமிழில் ‘காதல்’ என்று அர்த்தம்! ’நேரம்’ படம் மாதிரி இந்தப் படத்தை மலையாளம், தமிழ் என ஒரே நேரத்தில் எடுப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லையாம் அல்ஃபோன்ஸ் புத்திரன்!

இன்று காதலர் தினத்தையொட்டி தனது ‘பிரேமம்’ படத்தின் தலைப்பை அறிவித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் அல்ஃபோன்ஸ் புத்திரன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரிச்சி - டிரைலர்


;