போர்களத்தில் பாஹுபலி!

போர்களத்தில் பாஹுபலி!

செய்திகள் 14-Feb-2014 1:39 PM IST VRC கருத்துக்கள்

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி வரும் பிரம்மாண்ட தெலுங்கு படம் ‘பாஹுபலி’. சரித்திர கதை பின்னணியில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பிரபாஸ், ராணா முக்கிய கேரக்டர்களில் நடிக்க, அனுஷ்கா, தமன்னா கதையின் நாயகிகளாக நடிக்கிறார்கள். மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்காக போர்களம் போன்ற மிகப் பெரிய செட் ஒன்றை அமைத்து அதில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இந்தப் படப்பிடிப்பில் ஆயிரக்கணக்கான துணை நடிக்ரகளும் கலந்துகொண்டு நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தை அடுத்த ஆண்டு (2015) ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். செந்தில் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்திற்கு கீரவாணி இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நான் ஆணையிட்டால் - டிரைலர்


;