அஜித்துக்கு எச்சரிக்கை!

அஜித்துக்கு எச்சரிக்கை!

செய்திகள் 14-Feb-2014 12:53 PM IST VRC கருத்துக்கள்

‘ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி’ என்று ஒரு படத்தில் வடிவேலு பேசும் இந்த வசனம், நடிகர் அஜித்துக்கு ரொம்பவும் பொருந்தும்! பைக் ஆக்சிடென்ட் போன்ற பல விபத்துக்களால் ஏற்கெனவே பல முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் அஜித்! இருந்தாலும் நடிப்பு என்று வந்துவிட்டால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ரிஸ்க் எடுத்து நடிப்பார்!

விஷ்ணுவர்தன் இயக்கிய, ‘ஆரம்பம்’ படத்தில் நடிக்கும்போது கூட இவருக்கு ஒரு சிறு விபத்து ஏற்பட்டது! இதனை தொடர்ந்து டாக்டர்கள் அவரை உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்! ஆனால் தன்னால் படம் சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக அந்த ஆபரேஷனை தள்ளி வைத்தார்! அதன் பிறகு ‘வீரம்’ படத்திலும் நடித்து முடித்தார்! அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க ஆயத்தமாகி கொண்டிருக்கிறார்! இப்படி தான் செய்ய வேண்டிய ஆபரேஷனை தள்ளி வைத்துக் கொண்டே போகும் அஜித்தை அவரது டாக்டர்கள், ‘‘ஆபரேஷனை தள்ளிப் போடாதீர்கள், அது வேறுவிதமான விளைவுகளை ஏற்படுத்தும்’’ என்று எச்சரித்திருக்கிறார்கள்!

டாக்டர்களின் எச்சரிக்கைக்கு ‘தல’ மதிப்பு கொடுப்பார் என்றே நம்புவோம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

த்ரிஷா பிறந்தநாள் ஸ்பெஷல் - பயம் பாடல் வீடியோ


;