‘என்னமோ ஏதோ’ ரிலீஸ்?

 ‘என்னமோ ஏதோ’ ரிலீஸ்?

செய்திகள் 14-Feb-2014 11:12 AM IST VRC கருத்துக்கள்

‘கடல்’ படத்தின் மூலம் அறிமுகமான கௌதம் கார்த்திக் இப்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார்! அதில் ஒரு படம் ‘என்னமோ ஏதோ’. 'ரவிபிரசாத் புரொடக்‌ஷன்ஸ்' நிறுவனம் சார்பில் பி.ரவிகுமார், பி.வி.பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தில் கௌதம் கார்த்திக்குக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்க, ரவி தியாகராஜன் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் ,படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இப்போது படு ஜோராக நடந்து வருகிறது. டி. இமான் இசை அமைக்கும் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவிருக்கிறது. படத்தை அடுத்த மாதம் (மார்ச்) 28-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் அநேகமாக கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் இதுவாகதான் இருக்கும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இருட்டு அறையில் முரட்டு குத்து - பார்ட்டி பாடல்


;