இணையும் கமல் – சூர்யா!

இணையும் கமல் – சூர்யா!

செய்திகள் 14-Feb-2014 10:50 AM IST VRC கருத்துக்கள்

’ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ நிறுவனமும், ‘தி நெக்ஸ்ட் பிக் ஃபிலிம் புரொடக்‌ஷன்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் ‘குக்கூ’. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ராஜுமுருகன் எழுதி, இயக்கி வருகிறார். தினேஷ், மாளவிகா ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கும் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகிற 18-ஆம் தேதி சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் நடைபெறவிருக்கிறது.

படத்தின் ஆடியோவை நடிகர் கமல்ஹாசன் வெளியிட, நடிகர் சூர்யா பெற்றுக் கொள்கிறார். டிரைலரை எழுத்தாளர் வண்ணதாசன் வெளியிட, இயக்குனர் லிங்குசாமி பெற்றுக் கொள்கிறார். காதலை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாம் இது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உள்குத்து - டிரைலர்


;