‘மான் கராத்தே’ டிரைலர் விமர்சனம்

‘மான் கராத்தே’ டிரைலர் விமர்சனம்

விமர்சனம் 14-Feb-2014 10:18 AM IST Chandru கருத்துக்கள்

ஐந்தே படங்களில் மளமளவென முன்னுக்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த அதிரடி ‘மான் கராத்தே’. விஜய், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுக்கு ஜோடிபோட்ட தமிழ் சினிமாவின் தற்போதைய ஹாட் தேவதை ஹன்சிகா இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன், ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை இயக்கி வருபவர் கே.திருக்குமரன். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் உலக காதலர் தினமான இன்று (14-2-2014) வெளியாகி உள்ளது. ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் டீஸர் எப்படி இருக்கிறது?

அனிருத்தின் துள்ளல் இசையோடு பின்னணியில் கோரஸ் ஒலிக்க கேமராவை நோக்கி சிவகார்த்திகேயன் ரஜினி ஸ்டைலில் நடந்து வர, அடுத்த ஷாட்டில் இசைக்குத் தகுந்தபடி ஹன்சிகாவும் அசைந்தாடி ஸ்கிரினுக்குள் வர ஆரம்பமாகிறது ‘மான் கராத்தே’வின் டீஸர். 42 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய இந்த டீஸர் மொத்தமும் ஒரே பாடலை வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் டீஸர் முழுவதும் ஒரேவிதமான கோரஸ்தான் திரும்பத் திரும்ப ஒலிக்கிறது. டான்ஸில் இதுவரை பெரிதாக ஜொலிக்காத ஹன்சிகாவும், சிவகார்த்திகேயனும் முதல்முறையாக கலக்கலாக ஆட வைக்கப்பட்டிருக்கிறார்கள். நிச்சயம் இந்த அதிரடி குத்துப்பாடல் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெறும் என்பது டீஸரைப் பார்க்கும்போதே தெரிகிறது.

‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் லுங்கி டான்ஸ் போன்று இந்த டீஸரில் வரும் சிவா-ஹன்சிகாவின் லுங்கி டான்ஸும் யூத்களின் மனதை கொள்ளையடிக்கப் போகிறது. அதிலும் ஹன்சிகாவின் ‘க்யூட் எக்ஸ்பிரஸன்ஸ்’ ரசிகர்களுக்கு காதலர் தின கிஃப்ட்! இப்படம் எப்படிப்பட்டது என்பதை இந்த டீஸரை வைத்து நிச்சயம் முடிவு செய்ய முடியாது. ஆனால் இளைஞர் பட்டாளங்களை குறிவைத்து களமிறங்கி இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.

‘மார்ச் 1ஆம் தேதி முதல் இசை’ என்ற வாசகங்களோடு இப்படத்தின் டீஸர் நிறைவு பெறுகிறது. சோனி மியூசிக் இப்படத்தின் ஆடியோ உரிமையைப் பெற்றிருக்கிறது.

மொத்தத்தில் ‘மான் கராத்தே’ & கிளாமர் ஃபைட்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - கருத்தவன்லாம் கலீஜாம் ஆடியோ பாடல்


;