மீண்டும் மலையாளத்தில் லட்சுமி மேனன்!

Lakshmi Menon returns to malayalam

செய்திகள் 13-Feb-2014 4:59 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இப்போது தமிழில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் லட்சுமி மேனன் நடிகையாக அறிமுகமானது வினயன் இயக்கிய ‘ரகுவின்டெ சொந்தம் ரசியா’ என்ற மலையாள படம் மூலம்தான்! இந்த படத்தைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய ‘கும்கி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய லட்சுமி மேனனுக்கு பிறகு தமிழில் ஏறு முகம்தான்! தற்போது சித்தார்த்துடன் ‘ஜிகர்தண்டா, விமல் கூட ‘மஞ்சப்பை’, கௌதம் கார்த்திக் கூட ‘சிப்பாய்’ விஷாலுடன் ‘நான் சிகப்பு மனிதன்’ என பல படங்களில் நடித்து வரும் லட்சுமி மேனன் அடுத்து மலையாளத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான திலீபுடனும் ஜோடி சேர இருக்கிறார். மலையாளத்தின் பிரபல இயக்குனரும், தமிழில் ’ஏர்போர்ட்’ படத்தை இயக்கியவருமான ஜோஷி இயக்கும் படத்தில் தான் இருவரும் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

றெக்க - டிரைலர்


;