விலகினார் யுவன் ஷங்கர் ராஜா!

Yuvan Quits

செய்திகள் 13-Feb-2014 2:26 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாத்திற்கு மாறிய பின்பு, அவரின் பிரத்யேக ட்விட்டர் கணக்கிற்கு (@Raja_Yuvan) பலதரப்பட்ட விமர்சனக் கருத்துக்கள் வந்து விழுந்தன. இதனையடுத்து தற்போது அந்த அக்கவுன்ட்டை நீக்கியுள்ளார் யுவன். நீண்டநாட்களாக ட்விட்டரில் இயங்கிக் கொண்டிருந்த யுவன் கடைசியாக, ‘‘ஆம்... நான் இஸ்லாத்தை பின்பற்றுகிறேன். ஆனால், நான் மூன்றாவது திருமணம் செய்துகொண்டதாக வரும் செய்தியில் உண்மையில்லை. என் அப்பாவிற்கும் எனக்கும் இதனால் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எனது குடும்பத்தார் என் முடிவை ஏற்றுக் கொண்டார்கள்’’ என ட்வீட் செய்திருந்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - டிரைலர்


;