ஃபெஃப்சியிலிருந்து விலக அமீர் முடிவு?

ஃபெஃப்சியிலிருந்து விலக அமீர் முடிவு?

செய்திகள் 13-Feb-2014 2:13 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் ஆர்.எஸ்.ஆர்.ஸ்கிரீன்ஸ் மற்றும் என்.கே.கிராஃப்ட் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ள 'ஆதியும் அந்தமும்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காலை நடந்தது. இந்த விழாவுக்கு இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பத்திரிகைகயாளர்களை அழைத்திருந்தார்.

விழாவுக்கு வந்திருந்த அனைவரும் காலை உணவு அருந்திக்கொண்டிருந்த நேரத்தில் அங்கு வந்த ஃபெஃப்சி அமைப்பினர் வழக்கமான தங்களது அராஜக, அடாவடியில் இறங்கி சாப்பிட்டுகொண்டிருந்தவர்களை விரட்டியடித்தனர். இதை தட்டிக் கேட்ட பத்திரிகையாளர்கள் ரவிஷங்கர், பிஸ்மி, மணவை.பொன்மாணிக்கம் உள்ளிட்டோரை தாக்க முற்பட்டதோடு கொலை மிரட்டலும் விடுத்தனர். இவர்களின் அராஜகத்தை கண்ட வேறு சில பத்திரிகையாளர்கள் உடனே ஃபெஃப்சி தலைவர் அமீரை தொடர்பு கொண்டு நடந்த விஷயங்களை தெரிவித்தனர்.

இந்த அராஜகத்தில் ஈடுப்பட்டவர்களை அழைத்து விசாரித்த ஃபெஃப்சி தலைவர் அமீர், சம்பந்தபட்ட பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றதுடன், சங்கத்தை சேர்ந்தவர்கள் சங்கத்தில் மட்டுமே குறைகளை தெரிவிக்க வேண்டும் என்றும் தன்னிச்சையாக இந்த மாதிரி நடவடிக்கைகளில் ஈடுபட்டால் ஃபெஃப்சி தலைவர் பதவியிலிருந்து தான் ராஜினாமா செய்வேன் என்றும் கூறியுள்ளார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வைகை எக்ஸ்பிரஸ் - டிரைலர்


;