கெஸ்ட் ரோலில் விஜய்!

கெஸ்ட் ரோலில் விஜய்!

செய்திகள் 13-Feb-2014 1:59 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர் விஜய் கெஸ்ட் ரோலில் நடிப்பது ரொம்பவும் அரிதாகத்தான் இருக்கும். வழக்கமாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வேறொருவரை நாயகனாக வைத்து இயக்கும் படங்களில் சிறப்புத் தோற்றத்திலோ அல்லது ஒரு பாடலுக்கோ வந்துவிட்டுப் போவார் விஜய். அப்படி அவர் நடித்த படங்கள்தான் ‘சுக்கிரன்’, ‘பந்தயம்’ போன்றவை. ஹிந்தியில் ஏற்கெனவே பிரபுதேவாவின் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்த ‘ரவுடி ரத்தோர்’ படத்தில் ஒரு பாடலில் தோன்றி நடனமாடியிருக்கும் விஜய், தற்போது மீண்டும் அக்ஷய் குமாருடன் ஒரு படத்தில் இணைகிறார்.

விஜய் நடிப்பில் தமிழில் மாபெரும் வெற்றிபெற்ற ‘துப்பாக்கி’ படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘ஹாலிடே’ படத்தை இயக்குவதும் ஏ.ஆர்.முருகதாஸ்தான். தற்போது விஜய்யின் 57வது படத்தையும் இவரே இயக்கி வருகிறார். தனக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்த ஏ.ஆர்.முருகதாஸுக்காவும், அக்ஷய் குமாரின் நட்புக்காகவும் ‘ஹாலிடே’ படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருக்கிறாராம் விஜய். அவர் என்ன வேடத்தில் நடிக்கிறார், எப்போது நடிக்கிறார் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;