கல்யாணம் எப்போது? - மனம்திறந்த சிம்பு

கல்யாணம் எப்போது? - மனம்திறந்த சிம்பு

செய்திகள் 13-Feb-2014 1:48 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘லவ் பண்ணலாமா... வேணாமா...’ என ரொம்ப நாளாக யோசித்துக் கொண்டிருந்த சிம்புவும், ஹன்சிகாவும் ‘காதலிக்கிறோம்’ என அவர்களாக அறிவித்தார்கள். பிஸியாக வளர்ந்து வந்த இவர்களின் காதலில் அவ்வப்போது ஊடல்களுக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது. ‘பிரிந்துவிட்டார்கள்... காதல் அவ்வளவுதான்’ என சில மீடியாக்கள் இடையில் எழுதிக் கொண்டிருக்க, சத்தமில்லாமல் தங்கள் காதலை வளர்த்த அவர்கள் பெற்றோர்களிடமும் சம்மதம் வாங்கியுள்ளனராம். இதை உறுதிபடுத்தும் விதமாக சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளன்று கேக் வெட்டி கொண்டாடியது இந்த காதல் ஜோடி.

சமீபத்தில் சிம்புவின் தங்கை இலக்கியாவுக்கும் திருமணம் நடந்து முடிந்திருப்பதால், அடுத்தது சிம்புவின் திருமணம்தான் என்று தற்போது பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு பிரபல பத்திரிகைக்கு பேட்டியளித்த சிம்பு, தனது திருமணம் குறித்து, ‘‘வேட்டை மன்னன் பட சமயத்தில் நானும் ஹன்சிகாவும் அறிமுகமாகிக் கொண்டோம். ஆனால், அப்போ எதுவும் பெர்சனலாக பேசிக்கொள்ளவில்லை. திடீரென பேச ஆரம்பிச்ச நாங்க, பேசிகிட்டே இருந்தோம். இப்போ வரைக்கும் பேசிக்கிட்டே இருக்கோம். இது எங்கபோய் முடியும்னு எங்களுக்கும் தெரியலை!’’ எனக் கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;