கண்ணீர் விட்ட விஜி சந்திரசேகர்!

கண்ணீர் விட்ட விஜி சந்திரசேகர்!

செய்திகள் 13-Feb-2014 12:57 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஆர்.எஸ்.ஆர்.ஸ்கிரீன்ஸ் மற்றும் என்.கே.கிராஃப்ட் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆதியும் அந்தமும்’. இப்படத்தின் ஆடியோவை யு.டி.வி.நிறுவனத்தின் முதன்மை அதிகாரி ஜி.தனஞ்செயன் வெளியிட, இயக்குனர் வெற்றிமாறன் பெற்றுக்கொண்டார்.
‘ஆதியும் அந்தமும்’ படத்தை இயக்கியுள்ளவர் கௌஷிக். சின்னத்திரை நடிகராகவும் ஒருசில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ள இவர் பாலசந்தர், பாலுமகேந்திராவிடம் உதவியாளராகவும் பணி புரிந்துள்ளார். இயக்குனர் வெற்றிமாறனுடன் ‘கதை நேரம்’ தொலைக்காட்சி தொடரில் இணைந்து பணியாற்றியுள்ளார். இப்போது இவர் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ஆதியும் அந்தமும்’. சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ‘கோலங்கள்’ தொலைக்காட்சி தொடரில் ஆதியாக நடித்த அஜய் முதல் முறையாக பெரிய திரையில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மனநல மருத்துவராக இருக்கும் இவருக்கு ஏற்படும் ஒரு பிரச்சனையை மைய்யமாக கொண்டு இப்படம் உருவாகியிருக்கிறது.
விழாவில் பேசிய விஜி சந்திரசேகர், ‘‘இப்படத்தை பார்த்துவிட்டேன். நன்றாக இருக்கிறது. படம் முடிந்து 9 மணிக்கு மேல் நான் வீட்டுக்கு போய் சேர்ந்ததே பெரிய விஷயம்! இரவில் எங்கு பார்த்தாலும் அப்படத்தில் வரும் காட்சிகள் போலே தெரிந்தது. சாதரணமாக நான் கேமராமுன் அழுவதோடு சரி. நிஜத்தில் என் கண்ணில் கண்ணீர் வராது! இந்தப் படத்தை பார்த்து கண்ணீர் வந்தது’’ என்றார்.
மேலும் இவ்விழாவில் தேவயானி ராஜகுமாரன், மோகன் சர்மா, ‘ஸ்டுடியோகிரீன்’ எ.ஸ்.ஆர்.பிரபு உட்பட பலர் பாராட்டி பேசினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - நீ இன்றி பாடல் வீடியோ


;