அனுஷ்காவுக்காக ஒரிஜினல் தங்க கிரீடம்!

Gold Crown for Anushka

செய்திகள் 13-Feb-2014 10:43 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தற்போது, தான் நடித்து வரும் தெலுங்குப் படத்தில் ‘ருத்ரம்மாதேவி’யாகவே மாறிவிட்டார் அனுஷ்கா. பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் இப்படத்தைப் பற்றிய ஒவ்வொரு செய்தியும் தெலுங்கு ரசிகர்களை வாய்பிளக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட்களும், ஆடை அலங்காரங்களும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்படத்தில் இடம்பெறும் ராணி ருத்ரம்மாதேவியின் கிரீடம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரிஜினல் தங்கத்தையே பயன்படுத்தி அதை உருவாக்கியிருக்கிறார்களாம். இதுதவிர இப்படத்தில் அனுஷ்காவின் உடைகள் ஒவ்வொன்றையும் ஆராய்ச்சி செய்து தேடிக் கண்டுபிடித்து உருவாக்கியிருக்கிறாராம் கலை இயக்குனர் தோட்டா தரணி.

‘இந்தியாவின் முதல் வரலாற்று 3டி படம்’ என்ற பெருமையோடு உருவாகி வரும் இப்படத்தை குணசேகர் இயக்க, இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். அனுஷ்கா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ராணா டகுபதி, கிருஷ்ணம் ராஜு, நித்யா மேனன், கேத்ரின் தெரஸா, பாபு சேஹல் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த வருடத்திலேயே ‘ருத்ரம்மாதேவி’யை வெளியிட பிஸியாக வேலை செய்து வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகமதி - டிரைலர்


;