டேனியல் பாலாஜியின் மறுமுகம்!

The first of its kind crime-thriller

செய்திகள் 13-Feb-2014 10:29 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘என்டர் டெய்ன்மென்ட் அன்லிமிட்டெட்’ சார்பில் சன்ஜய் டாங்கி தயாரித்துள்ள படம் ‘மறுமுகம்‘. க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தை இயக்கியிருப்பவர் கமல் சுப்ரமணியம்.இப்படத்தை பற்றி கமல் சுப்ரமணியம் பேசும்போது, “இந்தப் படம் திரைப்படக் கல்லூரி மாணவர்களின் படம் என்று பெருமையாகச் சொல்வேன். நண்பர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறோம். எனது நண்பன், திரைப்படக் கல்லூரியின் சீனியர் மாணவர் டேனியல் பாலாஜி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ப்ரீத்தி தாஸ், அனு, ஷில்பி, ரிஷி ஆகியோரும் நடித்துள்ளனர். நாங்கள் முதலில் கதை சொல்ல செல்வது கேப்டன் விஜயகாந்த் அவர்களிடம்தான். திரைப்படக் கல்லூரி மாணவர்கள் எல்லோரது முதல் கனவும் அதுவாகதான் இருக்கும். அவர் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பலரை இயக்குநர் ஆக்கியவர். நான் இயக்கத் தயாராக இருந்தபோது அவர் அரசியல் என்ற வேறு உலகத்தில் இருக்கிறார். அவர் இப்போது நடிக்காதது எங்களுக்கு இழப்புதான்.

‘மறுமுகம்‘ என்பது என்ன? என்கிறார்கள். எல்லாரிடமும் பல முகங்கள் உண்டு. சூழலுக்கு ஏற்றபடி அவரவரது நல்ல முகமோ கெட்ட முகமோ வெளிப்படுகிறது. அப்படி வெளிப்படும் ஒருவனது மறுமுகம் தான் இப்படம். டேனியல் பாலாஜி வில்லனை போல் தோன்றினாலும் அவர் வில்லனில்லை. படத்தில் முக்கிய கேரக்டராக வரும் அவர் இப்படத்தின் மூலம் இன்னொரு டேனியல் பாலாஜியாக பார்க்கப்படுவார்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்


;